Wednesday, December 6, 2017

விண்டோஸ் 10 இயங்குதளம் (ஜூலை 29 ல் வெளியிடப்பட்டது)

விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 10 இயங்குதளம் ஜூலை 29 ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்து. பயனாளர்களுக்கு சோதனை அடிப்படையில் இலவசமாக ப்ரிவியூ பதிப்பினை அன்று வழங்கியது. இந்த பதிப்பில் இருந்த குறைகளை நீக்கி முழு சிறந்த தொகுப்பினை விண்டோஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது இதனை அனைவரும் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர்.



விண்டோஸ் 10 சிறப்பம்சங்கள் சில:


  • Cortana: இது ஒர் குரல் வழி இயக்கி முறையாகும் நம் குரலை உள்ளீடாக வழங்கி சில காரியங்களைச் செய்விக்கவும் முடிவதுடன் நாம்கேட்கும் கேள்விகளுக்கும் இது இணையத்தின் உதவியுடன் பதிளளிக்கிறது. இந்த வசதி தற்போது பிரபலமாகி வருகிறது, விண்டோஸ்சில் மட்டுமன்றி அப்பில், ஆன்டுரோய்ட் போன்ற இயங்குதளங்களும் தங்களுக் கெண்று இது பொன்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர். அத்துடன் இவ் வசதி மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எளிமையாக நினைவூட்டல் (Reminders) , தகவல்களை மிக விரைவாக தேடும் வசதியையும் பெற முடியும். இவையாவும் இணைய இணைப்பின் உதவியூடே இடம்பெறும்

  • Microsoft EDGE: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய உலாவி, இதுவரை வெளிவந்த இயங்குதளங்களில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி இருப்பியல்பாகவே இருந்து வந்தது , இனி அதற்கு பதிலாக மைக்ரோசாப்ட் எட்ஜ் உலாவி வெளிவந்துள்ளது உள்ளது. இதில் ஏனைய உலாவிகளில் இல்லாத பல புதிய சிறப்பம்சங்கள் காணப்படுகிறது.இதன் இடைமுகம் முழுமையாக மாற்றமடைந்திருப்பதுடன் பயன்பாட்டு வேகமும் முன்னேற்றமடைந்துள்ளது. மேலும் இதில் Make a Web Note எனும் வசதி தரப்பட்டுள்ளது இதன் மூலம் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தில் உள்ள நமக்குத் தேவையான விடையத்தை குறிப் பெடுத்தல் Screen shot எடுத்தல், இவற்றை பரிமாறல் போன்றவற்றையும் இதன் ஊடே செயற்படுத்தமுடியும். மேலும் Set aside வசதி மூலம் நாம் அடிக்கடி பார்வையிடும் இணைய பக்கத்தை சேமிப்பில் வைத்து இலகுவாகவும் விரைவாகவும் மீட்டுப் பார்க்க முடியும். Video about Microsoft Edge

  • மைரோசாப்ட் ஆப்பிஸ்:  ஆப்பிஸ் 2013 இணைப் போன்றது இருப்பினும் சில மேம்படுத்தப்பட்ட வசதிகள் பல உள்ளன. அதாவது பயனருக்கு வேன்டிய செயற்பாட்டை தேடிப் பெற்று செயற்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. உதாரணமாக பயனர் தன் ஆவனத்தில் புகைப்படம் ஒன்றை செருக நினைக்கின்றார் ஆனால் அதற்குறிய வழி அவருக்குத் தெரியாது, என்றபோதிலும் Tell me what you want to do... என்கிற வசதி மூலம் அவற்றை தேடிப் பெறமுடியும்.

  • Xbox: எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு அப்ளிகேஷன் விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் இருப்பியல்பாகவே வெளிவர உள்ளது. இதன் மூலம் விண்டோஸ் கணினிகளை நெட்வோர்க்கில் இணைத்து விளையாட முடியும்.

  • Project Neon:அதாவது கண்னாடி போன்ற தோற்றம்மாகும்.. இது வின்டோஸ் 10 மேம்படுத்தப்பட்ட முறைமையில் உள்ளது. பலரால் விரும்பப்பட்ட விடையம் என்ற அடிப்படையில் இதனையும் தந்துள்ளனர் Video About Neon

  • Update Assistant: வின்டோஸ் 10 இற்காக வெளியிடப்படும் புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளை தேடி அலைந்து பெறாமல் இணைய இணைப்பின்ஊடே விரைவாகப் பெற்றுக் கொள்ள இவ் மென்பொருளை வின்டொசில் தந்துள்ளனர்
இதுபோன்று பல்வேறு விதமான வசதிகளுடன் தன்னகத்தே கொன்டு பலரால் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment