Monday, December 11, 2017

வெப்சைட்டுளை (மென்பொருள் உதவியின்றி) Block செய்வது எப்படி?

நாம் பயன்படுத்தும் கணினியை நம்முடைய குழந்தைகளும் பயன்படுத்தலாம். அந்த சூழ்நிலையில் குழதைகள் சில தவறான வெப்சைட்டுகளை பார்க்க நேரிடலாம் அல்லது சமூக வலைதளங்களிலையே அவர்களுடைய முழு நேரத்தையும் விரயமாக்க கூடும். இந்த நிலையில் அவர்களை அந்த வெப்சைட்டுகளை எப்படி பார்க்க விடாமல் தடுக்க முடியும் என்று ஆராய்ந்து பார்த்தால் வெப்சைட்டுகளை ப்ளாக் செய்தால் இதனை தடுக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்திலெயே அதற்கான எளிய வழி உள்ளது.




முதலில் C:\Windows\System32\drivers\etc என்ற (Folder) அடைவினை திறக்கவவும் (Open) செய்யவும். அதில் உள்ள hosts என்ற (File) கோப்பினை திறக்கவும் . அதில் நீங்கள் எந்த இணைய பக்கத்தினை (Website) தடை செய்ய விரும்புகிறீர்களோ அதனை உள்ளீடு செய்யவும்.

உதாரணமாக நாம் (Google) கூகுள் (Search engine) தேடல் இயந்திரத்தினை (Blog) தடை செய்ய வேண்டுமெனில் 127.0.0.1 www.google.com என்று உள்ளீடு செய்யவும். இந்த கோப்பில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் இதற்கு உங்களுக்கு (Admin) நிர்வாக உரிமை தேவை.


இந்த முறையினை பின்பற்றி எளிமையாக (Website) இணையப்பக்கம் அல்லது பக்கங்களை தடை செய்து கொள்ள முடியும். 

இணையப்பக்கம் அல்லது பக்கங்களை (Unblock) விடுவிக்க வேண்டுமெனில் மேலே கூறியுள்ள வழிமுறையினை பின்பற்றி hosts என்ற கோப்பைத் திறந்து இதில் நீங்கள் எந்த இணையப்பக்கத்தை நீக்க விரும்புகிறீர்களோ அதனை நீக்கிவிட்டு கோப்பினை சேமித்தி கொள்ளவும்.

No comments:

Post a Comment