Sunday, December 17, 2017

கூகுள் மூலமாக நீங்கள் தேடிய விடயங்களை அறிய (Google - Search History)


கூகுள் மூலமாக நாம் பல்வேறு இணைய தள முகவரிகளை கண்டறியக்கூடும். நமக்கு ஏதும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே கூகுள் மூலமாக தேடி குறிப்பிட்ட செய்தியை பெற்றுக்கொள்வோம். இவ்வாறு நாம் கூகுளின் மூலமாக எப்படி, எந்த நேரத்தில் எல்லாம் தேடியுள்ளோம் என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

தேடிய விடயங்களை அறியலாம்




இந்த தளத்தில் நீங்கள் உள்நுழைந்தவுடன் வகை வாரியாக உங்களுடைய வரலாற்றினை பட்டியட்டு காட்டும். மேலும் அவற்றை Detail என்பதை சொடுக்கி மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் அத்துடன் அவற்றை மீீன்டும் பார்வையிடவும் முடியும்.



தேடிய விடயங்களின் வரலாற்றை அழிக்கலாம்




நீங்கள் தேடிய விடயங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் அழித்தல் அல்லது நாள் வாரியாக அழித்தல் போன்ற வசதிகளையும் தந்துள்ளனர். இதற்கு Delecte activity by எனும் இடது பக்கமாக உள்ள சொல்லை சொடுக்கி தரவுகளை தேர்வுசெய்து அழித்துவிடமுடியும். 

எங்கெள்ளாம் உங்கள் சாதனத்தை பயன்படுத்தி Google இல் தேடியுள்ளீர்கள் என அறிய



அதுமட்டுமின்றி நீங்கள் எவ்எவ் இடங்களில் எல்லாம் Google சேவையை பயன்படுத்திநீர்களோ அப் பௌதீக இடங்கள் எல்லாம் Google map முறையிலும் குறித்துக்காட்டப்பட்டிருக்கும் எனவே நீங்கள் எங்கெள்ளாம் உங்கள் சாதனம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இலகுவில் இனங்கண்டுகொள்ள முடியும். இவ் வசதியை பார்வையிட உங்கள் இடப்பக்க Navigation pane இல் உள்ள other Google activity என்பதை சொடுக்கி அதன் பின் கிடைக்கப்பெறும் பக்கத்தில் Location History எனும் தலைப்பின் கீழ் உள்ள VISIT TIMELINE என்பதில் சொடுக்கினால் போதுமானது.

மேலும்நீ ங்கள் குறிப்பிட்ட உங்களுடைய கூகுள் கணக்கில் உள்நுழைந்த பின்னரே இவற்ற எல்லாம் காண முடியும். மேலும் உங்களுடைய கணக்கு உள்நுழைந்த பின் தேடியவற்றை மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ள தளத்தில் காண முடியும்.


Google இன் இத்தகு செயற்பாடுகளை நிறுத்த


இடப்பக்கமுள்ள Activity controls என்பதை சொடுக்குங்கள். அதன் பின் கிடைக்கப்பெறும் பக்கத்தில் Web & App Activity என்னும் தலைப்புப் பகுதியில் உள்ள Button இனை Disable செய்யுங்கள்.


Disable செய்தபின் பின்வருமாறான window தோன்றும்.


இதில் PAUSE எனும் சொல்லை சொடுக்குங்கள் அவ்வளவுதான்.

No comments:

Post a Comment