Friday, February 9, 2018

எழிய தமிழில் ஜவா - மின்நூல்



தகவல் தொழில் நுட்பத் துறையில் ஒரு புதிய மறுமலர்ச்சியினை ஏற்படுத்திய மொழி JAVA என்றால் அது மிகையாகாது. மிகக் குறுகிய காலத்தில் உலகம் முழுவதும் பிரசித்தம் பெற்ற பல்வேறு அலுவலகங்களிலும் இன்றும் JAVA பயன்படுத்தப்படுகிறது. JAVA வின் இந்த வியத்தகு வளர்ச்சிக்கு Internetன் பயன்பாடுகள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்ததே காரணமாகும். ஏனெனில் JAVA வில் Internet ஐச் சார்ந்த புரோகிராம்களை எளிமையாக எழுத இயலும். மேலும் எப்படிப்பட்ட Application Program களை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ள இயலும். இவற்றைவிடவும் JAVA பிராலமானதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. அது JAVA இலவசமாக கிடைக்கின்றது. இதனை Internet இல் இருந்து இலவசமாக Download செய்து கொள்ளலாம்.

இந்த புத்தகத்தில் JAVA வின் அனைத்துப் பயன்பாடுகளையும் மிக தெளிவாக சிறந்த எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கியிருக்கிறேன். இதன் அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து நுணுக்கமான அனைத்து புரோகிராமிங் முறைகளும் இனிய தமிழில் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளதால் இந்த புத்தகம் தங்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று உளமாற நம்புகிறேன்.

வாழ்த்துக்களுடன்,
பாக்கியநாதன்




No comments:

Post a Comment