Thursday, February 15, 2018

கனிணியின் வேகத்தை சற்று அதிகரிக்கவும் பாதுகாக்கவும்



நமது கனணியின் செயற்பாடானது நாளடைவில் குறைந்து செல்வதையும், இடப்பற்றாக்குறை தோன்றுவதையும் காணலாம். இது அனைத்து கருவிகளிலும் இருக்கக்கூடிய பொதுவான ஒரு பிரச்சினையே தற்காலத்தில் உணரப்படுகிறது.

இதற்கு பிரதான காரணங்கள் என்னவென்றால் 
  • கணினி அதிக நேரத் கையாலப்படுவதல், 
  • ஒழுங்கான முறையில் Shutdown செய்யப்பட்டிருக்காமை, 
  • கணினிக் கோப்பு முறை ஒழுங்கமைக்கப்படாமல் காணப்படல், 
  • வன்தட்டு மற்றும் RAM தற்போக்கு எழுமாறு அனுகள் நினைவகம் என்பவற்றில் நிலவும் இடப்பற்றாக்குறை, 
  • வன்பொருள் இடர்பாடுகள், 
  • இற்றைப்படுத்தப்பட்ட அல்லது இற்றைப்படுத்தப்படாத மென்போருளில் நிலலும் இடர்பாடுகள், 
  • நச்சு நிரல் தொற்று  

மேலும் நாம் அன்றாடம் அன்றாடம் பயன்படுத்தும் பிரயோக மென்பொருட்களை இயக்கும் போது உருவாகும் தற்காலிக கோப்புக்கள் அழிவடையாமல்  இருப்பதும், நமக்கு தேவையற்ற மென்பொருட்களை கனிணியிலிருந்து நீக்காமல் (Uninstall) வைத்திருப்பதாலேயாகும்.

தற்காலிக கோப்புக்களை நீக்கும் வழிமுறை

படிமுறை-1

விசைப்பலகையில் உள்ள Windows Button + R Button இணை அழுத்தவும்.

அதன் பின் பெறப்படும் Run box இல் Prefetch என தட்டச்சிட்டு OK அழுத்தவும்.



இச் செயற்பாட்டின் பின்னர் திறக்கப்படும் கோப்பில் காணப்படும் அனைத்து கோவைகளையும் தெரிவு செய்து Delete செய்யவும்.



அதன் போது இடையிடையோ தோன்றும் Message Box இல் கீழ்க்கண்டவாறு செயற்படவும்.


  • மேற்படி செயற்பாட்டின் போது சில வேளைகளில் ஒரு சில போவைகளை நீக்க முடிவதில்லை. 

மேற்படி செயற்பாடு முடிவுற்ற பின்....

படிமுறை-2

மீண்டும் Run இணை திறந்து (Windows + R); அதனுள் temp என தட்டச்சிட்டு OK செய்யவும்.

இதன் பின்னதாக திறக்கும் கோப்பில் காணப்படும் அணைத்து கோவைகளையும் முன்னர் சொன்னது போன்று Delete செய்யவும்.

இச் செயற்பாடும் முடிந்த பின்னர்...

படிமுறை-3



மீண்டும் Run இணை திறந்து (Windows + R); அதனுள் %temp% என தட்டச்சிட்டு OK செய்யவும். அதில் உள்ள அனைத்க் கோவைகளையும் நீக்கிவிடவும்.

படிமுறை-4

உங்கள் முன் திரையில் (Desktop) உள்ள This PC என்பதை திறந்து கொள்ளவும்.


படிமுறை-5

அதனுள் காணப்படும் C: பிரிவை சுட்டியைப் பயன்படுத்தி வலப்பக்கமாகச் சுட்டவும்.
அதன்பின் கிடைக்கப்பெறும் Menu வில்  Properties என்பதை சொடுக்கவும்.



படிமுறை-6

அதன் பின் தோன்றும் Dialog Box இல் Disk Clean-up என்பதனைச் சொடுக்கவும்.

சற்றுநேரத்தின் பின் கிடைக்கப்படும் Disk Clean-up எனப்படும் Dialog Box இல் Files to delete: என்பதற்கு கீழ் உள்ள அனைத்து விடையங்களையும் தெரிவு செய்யவும்.


பின்னர் Clean up system files என்பதை சொடுக்கவும்..


படிமுறை-7

சற்று நேரத்தின் பின் மீண்டும் அதே Disk Clean-up தோன்றும்.

மீண்டும் அதில் Files to delete: என்பதற்கு கீழ் உள்ள அனைத்து விடையங்களையும் தெரிவு செய்யவும்.

தெரிவு செய்துவிட்ட பின்னர் More Options எனும் ஒட்டில் (Tab) இல் சொடுக்கவும். அச் சாளரத்தில் உள்ள System Restore and Shadow Copies என்பதன் கீழ் காணப்படும் Clean up... எனும் பொத்தானைச் சொடுக்கவும்.


அதன் பின் தோன்றும் Message Box இல் Delete என்பதை சொடுக்கவும்.

மேற்படி செயற்பாடுகள் அனைத்தும் முடிந்த பின் Disk Clean-up சாலரத்தில் உள்ள OK பொத்தானை அழுத்தவும். பின் பெறப்படும் message Box இல் Delete Files என்பதை சொடுக்கவும்.

அவ்வளவு தான் உங்கள் கணினியில் சேமிப்பில் உள்ள அனைத்து தற்காலிக கோப்புக்களும் அழிந்து நினைவகத்தின் இடவசதி சற்று அதிகமாகும், அத்துடன் கணினிச் செயற்பாட்டு வேகமும் சற்று அதிகரிக்கும்.


கணினியின் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்தல்


No comments:

Post a Comment