Friday, February 16, 2018

உங்கள் பென்ட்ரைவ் வை வைரஸ் தாக்கிவிட்டதா? மீட்க வழி


தகவல்களை சேமிக்க பெரும்பாலும் நாம் அணைவரும் USB Drive பென்ட்ரைவ் இணையே பயன்படுத்துகிறோம். பல்வேறு தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பென்ட்ரைவ் வை வெவ்வேறான கணினிகளில் உட்செலுத்தவேண்டிய தேவை கட்டாயமாகியுள்ளது. இதன் காரணமாக நச்சுநிரல் (Virus) தாக்கமும் பென்ட்ரைவிற்கு அதிகமாகும்.

இப்படி பாதிப்பிற்குள்ளாகும் பென்ட்ரைவில் உள்ள நமது முன்னைய தகவல்கள் மறைக்கப்பட்டுவிடுகின்றன. அதாவது பென்டை்ரைவ்வை கணினியில் உட்செலுத்தித் திறந்தால் பென்ட்ரைவ் வெறுமையாக காணப்படும் அல்லது அதில் தேவையற்ற குறுக்குவழி (Shortcut) கோப்புக்களும் தோன்றியிருப்பதை காணலாம்.



இப்படிப்பட்ட இடர்பாடான நிலையிலிருந்து மீட்டு நம் முன்னைய தகவல்களை எவ்வாறு மீட்டெடுப்பது எனப் பார்ப்போம்.

வழிமுறை

  1. பென்ட்ரைவ்வை கணினியில் சொருகிக் கொள்ளுங்கள்.
  2. பென்ட்ரைவ் எந்த ட்ரைவ் எழுத்தில் உள்ளது எனக் கண்டறியுங்கள். (This Pc இனை திறந்து உங்கள் பென்டைவிற்குறிய ஆங்கில எழுத்தை கண்டறியலாம். உதாரணம்- உங்கள் பென்ட்ரைவின் பெயருடன் ஓர் இரட்டை அடைப்பிற்குள் ஆங்கில எழுத்க் காணலாம் Nivan (j:))
  3. பின் Start / Windows button + R button இணை அழுத்தவும். இதன்போது Run எனும் சாலரம் திரையில் தோன்றும்.
  4. அதில் cmd என தட்டச்சிட்டு OK செய்யவும்.
  5. பின் தோன்றும் CMD சாலரத்தில் பென்ட்ரைவிற்குறிய எழுத்தை தட்டச்சிட்டு Enter key இனை அழுத்தவும். (J:)
  6. அடுத்ததாக attrib -h -r -s /s /d என தட்டச்சிட்டு Enter key இனை அழுத்தவும்.
சில வினாடிகள் பொருத்துக்கொள்ளுங்கள். இப்போது This Pc இல் உள்ள உங்கள் பென்ட்ரைவினை திறந்து பாருங்கள் நச்சுநிரலினால் (Virus) மறைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து கோப்புக்களும் மீன்டு வந்திருப்பதைக் காணலாம்.


இச் செயற்பாட்டின் பின்னர் உங்களுக்கு தேவையான கோப்புகளை (Folder) மட்டும் வைத்து விட்டு ஏனைய கோப்புகளை நீக்கிவிடுங்கள் (Delete)

No comments:

Post a Comment