Sunday, April 29, 2018

கோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பாதுகாத்துக் கொள்ள - Folder Lock (Software/app)




அலுவலக சம்பந்தமான முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை (Folder)  அல்லது நமது தனிப்பட்ட இரகசிய கோப்புக்களை பாதுகாப்பாக வைக்கவும் மேலும் அதனை மற்றவர்களுக்கு தெரிந்து விடாமல் பாதுகாப்பாக மின்னஞ்சல் அனுப்பவும் மென்பொருட்கள் பல உள்ளன இருப்பினும் அவற்றை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டும். 

அவ்வாறு இல்லாமல் இலவசமாகவே மென்பொருள் ஒன்று கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அல்லவா? இப் பதிவில் இவ்வாறான மென்பொருள் பற்றியே நோட்டமிடவுள்ளோம். 

இம் மென்பொருள் மூலம் கோப்புகளை மறைகுறியாக்கம் (Encrypt) செய்யவும் மற்றும் (மறைகுறி நீக்கம்) Decrypt செய்து கொள்ள முடியும்.

 மென்பொருளை download செய்து கொள்ளுங்கள்

படிமுறை - 1

மேலுள்ள Download இணைப்பை Click செய்து kryptel இணையதளத்திற்குள் நுளைந்து கொள்ளுங்கள்.. பின் அவ் இணையதளத்தில் Free Software என்பதாக படத்தில் காட்டப்பட்டது போன்று ஓர் பகுதி உள்ளது இதில் உள்ள Latest version (முதலாவதாக உள்ள Kryptelite (Kryptel Free Edition) version 8.0.1 (9.91 Mb)) மென்பொருளை உங்கள் கணினியில் Download செய்து நிறுவிக் கொள்ளுங்கள்.


படிமுறை - 2

மென்பொருள் install செய்துமுடித்த பின்....

நீங்கள் Lock செய்ய விரும்பிய Folder அல்லது File (video, audio, game, image) என்வற்றின் மீது mouse pointer இணை வைத்து வலப்பக்கமாக click செய்யுங்கள் (Left click)

அதில் Lock அடையாளம் இடப்பட்ட நிலையில் Encrypt என்பதான செல்லை click செய்யுங்கள்.

 
அதன் பின் சிறியளவான window தேிரைதில் தோன்றும் அதில் நீங்கள் விரும்பிய அல்லது உங்களால் ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடிய கடவுச்சொல்  (Password) ஒன்றினை தட்டச்சிடுங்கள் (Typing) 

பின் Reenter எனும் Button இணை click செய்து மீண்டும் உங்கள் கடவுச் செல்லை தட்டச்சிடுங்கள்.

தட்டச்சிட்டபின் Ok button இணை click செய்து விடுங்கள்.


நீங்கள் lock செய்த Folder / File என்பது Lock செய்யப்பட்டுவிட்டது என்பதற்கு அடையாளமாக அதன் மீது Lock அடையாளம் இடப்பட்டு காண்பிக்கப்படும்.


மீண்டு இவ் File இணை Open செய்ய வேண்டுமாயின் நாம் முன் கொடுத்த கடவுச் சொல்லை தட்டச்சிட்டால் மாத்திரமே open செய்யப்படும்.

No comments:

Post a Comment