Tuesday, July 10, 2018

Dumpster app மூலம் ஆண்ட்ராய்டுல் அழித்த பைல்களை மீட்கலாம்!


App name - Dumpster:Recover My Deleted photos and Video Files
Size - 11.27MB
Available - Google play store


ரீசைக்கிள்பின் (Recycle bin / Trash) பற்றி விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்கள் இது பற்றி நன்றாக அறிதிருக்க வாய்ப்பு உண்டு.
எமது கணினியில் இருக்க கூடிய ஏதாவதொன்றை நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அழித்து விடும் சந்தர்ப்பத்தில் அவற்றை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் செயற்பாட்டையே இந்த ரீசைக்கிள்பின் செய்கிறது.
எனவே நாம் அழித்த பைல் ஒன்று மீண்டும் எமக்கு தேவைப்படும்போது எவ்வித கவலையும் இன்றி அவற்றை ரீசைக்கிள்பின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வசதி நாம் அன்றாடம் பயன் படுத்தும் எமது ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்தால் எவ்வாறு இருக்கும்? மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அல்லவா. இதனை சாத்தியபடுத்துகிறது (Dumpster) டம்ப்ஸ்டர் எனும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்.

இதனை பயன்படுத்துவது மிகவும் இலகு. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாகவே டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.

இதனை பயன்படுத்துவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் டம்ப்ஸ்ட்டர் செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்ட்டால் செய்து விடுவது மாத்திரமே. பின்னர் நீங்கள் அழிக்கும் அனைத்து பைல்களும் இந்த டம்ப்ஸ்ட்டர் செயலியை சென்றடையும். பின் அழித்த பைல்கள் உங்களுக்கு தேவைபட்டால் டம்ப்ஸ்ட்டர் செயலில் இருந்து பெற்று கொள்ளலாம்.


இத்தகவல்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்....

இதுப இதுபோன்ற இன்னும் பல விடயங்களை தெரிந்து கொள்ள எம் இணைய பக்கத்தை தொடருங்கள்


No comments:

Post a Comment