Thursday, August 9, 2018

Whatsapp குறிவைத்துள்ள மோமோ (MOMO) எனும் பயங்கரம்




எச்சரிக்கை வருகிறது புதிய பயங்கரம் மோமோ.
அர்ஜென்டினாவில் ஒரு 12 வயது சிறுமியின் மரணத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது போலீஸ்.
அப்போதுதான் அதை கண்டுபிடித்தது அந்த சிறுமி தான் தூக்கிட்டு இறந்ததை வீடியோவில் பதிவு செய்து இருந்தாள்.
இது "blue whele " பாணி ஆச்சே என்று மண்டையில் எச்சரிக்கை மணி ஒலிக்க ஆராய்ந்தபோதுதான் அந்த பயங்கரம் தெரிந்தது.
"Momo " ஆன்லைனில் பரவி வரும் புதிய அபாயம்.

மேலுரிக்கப்பட்ட வெளுத்த முகத்துடன் கண்கள் பிதுங்கி பிணம் போல் காட்சியளிக்கும் ஒரு கற்பனை கதாபாத்திரம் தான் momo. இது உங்களை சந்தித்து momo chalange கொடுக்கும். அதன்படி முதலில் முன்பின் தெரியாத ஒரு அக்கௌன்ட் உடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள சொல்லும்.
நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்து அதனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றால்
அதன் பிறகு அந்த அக்கவுண்டில் இருந்து தொடர்ந்து உங்களுக்கு பயங்கரமான படங்கள் அனுப்பி வைக்கப்படும்.
ஆரம்பத்தில் கொடூரமான படங்கள் வன்முறையான வீடியோக்கள் என்று ஆரம்பிக்கும் இந்த challenge போகப் போக உங்கள் நண்பரை கொல்லுவது.
இறுதியில் தன்னை தானே மாய்து கொல்வது என்று முடியும். Chalange ஐ ஏற்க மறுப்பவர்கள் பெர்சனல் டேட்டாக்கள் திருடப்பட்டு மிரட்ட படுவார்கள்.

விஸ்கான்சின் இல் ஒரு சிறுமி இந்த கதாப்பாத்திரத்தை திருப்திபடுத்த தனது தோழியை கொலை செய்ய முயற்சி செய்யும்போது  பிடிபட்டு இருக்கிராள்.
முதலில் பேஸ் புக் இல்  முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள் தங்கள் தகவலை பகிர்ந்து கொள்ளும் chalang இல் ஈடுபடும் ஒரு fb குரூப் மூலம் தான் இது தொடங்கி இருக்கிறது . இன்று வாட்ஸ் அப் இல் மிரட்டி வருகிறது.
சரி என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் இதில் இறங்குபவர்கள்.
தனது பர்சனல் டேட்டாக்களை பறிகொடுத்து மிரட்டலுக்கு ஆளாகிறார்கள்.
எனவே மோமோ உங்களை எதிர்கொண்டால் எச்சரிக்கையாக இருக்கவும்.
உங்களுக்கு தெரிந்த குழந்தைகள் மற்றும் மாணவர்களிடம் எச்சரிக்கையும் பாதுகாப்பையும் சொல்லிக் கொடுங்கள்.

No comments:

Post a Comment