Tuesday, October 30, 2018

Android cloning - உங்களது ஆன்ட்ராய்டை க்ளோன் செய்வது எப்படி? (Android App)


க்ளோனிங் (Cloning) என்பது ஒன்றின் முழுமையான பிரதி எனப் பொருட்படும். இதன் ‌தேவை ஆன்ட்ராய்டு சாதனத்திற்கு ஏன் அவசியம்?

உங்களிடம் ஓர் பழைய ஆன்ராய்டு போன் உள்ளது என வைத்துக் கொள்ளுங்கள், அதில் உங்களுக்கு மிகவும் தேவையான அல்லது மிக முக்கியமான தகவல்கள் நிறைந்த உள்ளதா ‌நினைத்துக் கொள்ளுங்கள்.

இந்த நிலையில் பழைய ஆன்ட்ராய்டு போனின் செயற்பாடு சீரின்மை காரணமாக நீங்கள்  ஓர் புதிய ஆன்ட்ராய்டு போனினை தற்போது கொள்வனவு செய்துள்ளீர்கள் அல்லது உங்களுக்கு ‌பரிசாக ஓர் ஆன்ராய்டு போன் கிடைத்துள்ளது எனக் கற்பனை செய்து கொள்ளுங்கள்

இப்போது உங்கள் ‌பழைய‌‌ ஆன்ராய்டு போனை இரண்டாம் தாரமாக விற்கவோ அல்லது நண்பர் / உறவினர் ஒருவருக்கு கொடுக்கவோ அல்லது அதை முழுமையாக பயன்படுத்தாமல் விடவோ தீர்மானம் எடுத்துள்ளீர்கள்.

ஆனால் ‌இதில் உள்ள‌ தரவுகள் (Contacts, Images, Audio, Video, Apps……) உங்களுக்கு மிகவும் முக்கியமானவை, அவற்றையெல்லாம் எவ்வாறு முழுமையாக புதிய ஆன்ட்ராய்டு போனிற்கு மாற்றுவது? கணினியின் உதவியுடன் தரவை நகல் (copy) எடுத்து பரிமாற்ற (Transfer) முயன்றால் வேலை பன்மடங்காகி தாமதமாகிவிடும். மேலும் அம் முறையில் தரவுகளை முழுமையாக பரிமாற்ற இயலாது, குறிப்பாக ஆன்ராய்டு பிரயோக மேன்போருட்களை (Android app)‌ முழுமையாக பரிமாற்ற இயலாது.

இப்‌ பிரச்சினைக்குத் தீர்வாகவே ஆன்ராய்டு க்ளோன்இட் (Cloneit) எனும் செயலி/ பிரயோகம் (App) உள்ளது.


உங்களது ஆன்ட்ராய்டை க்ளோன் செய்வது எப்படி?

இதை செய்ய உங்களிடம் இருக்க வேண்டியது க்ளோன்இட் (CLONEit) எனும் ஒற்றை செயலி மட்டுமே. ஆன்ட்ராய்டு சாதனத்தில் இதனை இன்ஸ்டால் செய்து கொண்டால் உங்களது சாதனம் மற்றும் அதில் உள்ள தரவுகளை க்ளோன் செய்து கொள்ளலாம். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்:

1) முதலில் க்ளோன்இட் செயலியை Play Storeல் இருந்து டவுன்லோடு செய்து அதனை உங்களது பழைய மற்றும் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.


2) அடுத்து இரண்டு ஆன்ட்ராய்டு சாதனங்களிலும்  செயலியை திறக்க (Open) வேண்டும். பின் திரையில் அனுப்புநர் (sender) மற்றும் பெறுநர் (Receiver) என இரு தெரிவுகள் (Options) காணப்படும்.


3) நீங்கள் க்ளோன் செய்ய வேண்டிய சாதனத்தில் அதாவது உங்கள் பழைய சாதனத்தில் அனுப்புநர் (Sender) எனும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். க்ளோன் செய்யப்பட வேண்டிய சாதனத்தில் அதாவது உங்கள் புதிய சாதனத்தில் பெறுநர் (Receive) தெரிவை (Options) தேர்ந்தெடுக்க வேண்டும்.
4) மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தேர்வு செய்ததும், ஸ்கேன் செய்யும் வழிமுறை துவங்கும். இனி அனுப்புநர் (Sender) சாதனம் பெறுநர் (Receiver) சாதனத்தை கண்டறியும், அடுத்து திரையில் தோன்றும் சாதனத்தை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் சாதனங்கள் இண‍‌ணைப்புச் (Connect) ‍‍செய்யப்பட்டு விடும்.

5) சாதனங்களை வெற்றிகரமாக இணைப்புச் செய்ததும், வைபை ஹாட்ஸ்பாட் இரண்டு சாதனங்களிலும் தன்னிச்சையாக செயற்படும். இனி சில நிமிடங்களில் தரவுப் பரிமாற்றம் (Data Transferring) துவங்கி, உங்களது அனைத்து தரவுகளும் மற்றொரு (புதிய) ஆன்ட்ராய்டு சாதனத்திற்கு மாற்றப்படும்.

No comments:

Post a Comment