Thursday, December 6, 2018

RIP ⚰😢 Google Alloஇனை முற்றாக நிறுத்த போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.


உலகம் முழுவதும் உள்ள IT Park வாசகர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த அன்பான வணக்கங்கள். IT Park வலைத்தளத்தில்  இடம்பெறும் பதிவுகளை வாசிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் கட்டுரைகள் தொடர்பில் உங்கள் சொந்த கருத்துக்களையும், உங்கள் எதிர்பார்ப்புகளையும் comments பகுதியில் பதிவிடுங்கள் அவ்வாறு நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்தும் நான் விடும் பிள்ளைகளில் இருந்து திருத்திக் கொள்ளவும் உதவியாய் இருக்கும். மேலும் இதில் இடம்பெறும் தொழில்நுட்பக் கட்டுரைகளை WhatsApp, Facebook, Twitter போன்ற தளங்களில் பகிர்ந்து எம் வளர்ச்சிக்கும் உதவிக்கரம் நீட்டுங்கள். நன்றி..
அல்லோ (Allo) என்பது ஒரு மெசேஜ் அப் ஆகும் இதனை கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அல்லோ மற்றும் டுவோ ஆகிய இரு புதிய சேவைகளையும் கூகுள் அறிமுகப்படுத்தியிருந்தது.


இதில்  டுவோ (Duo) மூலம் இலவச வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடியும்.

இதில் அல்லோ சேவையை நிரந்தரமாக நிறுத்தப் போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே இந்த சேவை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லோ சாட் ஆப்-இல் வழங்கப்பட்ட வசதிகள் அனைத்தையும் கூகுளின் மெசேஜ் ஆப் இற்கு மாற்ற இருப்பதாகவும் கூகுள் நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவிப்பின் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் நீங்கள் இதுவரை கூகுளின் அல்லோ சாட் ஆப்-ஐ பயன்படுத்தியவர் எனின் உங்களது சாட்டிங் (Chatting) தரவுகளை ZIP அல்லது CSV பைல் ஆக சேமிக்கவும் வசதியையும் கூகுள் ‌நிறுவனம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் மேலதிக தகவல்களை அறியலாம் கிளிக் செய்யவும்:https://support.google.com/allo/answer/7365005#download



எனவே மூடு விழாவின் இருத்தல் கூகுள் ப்ளஸ் மற்றும் இன்பாக்ஸ் போன்றவற்றுடன் அல்லோ-வும் இணைந்துள்ளது.

1 comment: