Saturday, December 8, 2018

இணைய பக்கத்தில் Contact me பகுதியினை இலகுவில் உருவாக்குவது எப்படி?



இணையதள வடிவமைப்பாளர்களுக்கு அல்லது blogspot வைத்திருப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

Foxyform என்ற இனைய தளம் நமக்கான Contact Me பக்கம் சுலபமாக உருவாக்க வழி செய்துள்ளது. இது நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாதவர்களுக்காக இதை எழுதுகிறேன்.  இந்த வலைதளத்தில் நமக்கு Account இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை யார் வேண்டுமானாலும்
தங்கள் வலைபதிவிற்கு (website) Contact Me பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.   முதலில் Foxyform என்ற இணைய தளத்தை கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி உங்கள் இன்டர்நெட் பிரவுசரில் திறந்து கொள்ளுங்கள் http://www.foxyform.com பிறகு கீழே உள்ள படத்தில் உள்ளது போல் உங்களுக்கு Foxyform தளம் தோன்றும்.






YOUR OPTIONS என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான வசதிகளை தேர்ந்தெடுத்து
எழுத்தின் அளவு,
வண்ணம், மற்றும் சில மாறுதல்களை மேற்கொள்ளலாம்.

YOUR E-MAIL ADDRESS என்ற இடத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்.  இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தான் Contact Me பக்கத்தில் வாசகர்கள் உங்களுக்கு அனுப்பும் கருத்துக்கள் அனைத்தும்  வரும்.

பிறகு Create Formular என்ற Button 'ஐ கிளிக் செய்யுங்கள் இப்போது உங்களுக்கு உங்களுடைய Contact Me Form 'க்கான HTML Code கிடைக்கும்.

அந்த HTML கோடிங்கை Copy செய்து கொள்ளுங்கள்.  பிறகு உங்கள் பிளாக்கில் Posting ==> New Page சென்று Page Title 'ஐ Contact Me என்று கொடுங்கள்.

பிறகு  Edit HTML தேர்வுசெய்து Email Me Form HTML கோடிங்கை Paste செய்து PUBLISH PAGE கிளிக் செய்யுங்கள்.

இப்போது உங்கள் பிளாக்கருக்கான Contact Me page தயார்.


பதிவுகளை  பகிர்ந்து (Share) மற்றவர்களுக்கும் இதனை தெரிவியுங்கள், உங்கள் கருத்துக்களையும்  (Comments) தெரிவியுங்கள்

No comments:

Post a Comment