Sunday, December 9, 2018

இலங்கையில் உங்களது மின்சார பட்டியல் தொடர்பான விபரங்களை அறிய வந்துவிட்டது ஆண்ட்ராய்டு ஆப்



இன்னறய காலகட்டத்தில் வங்கி நடவடிக்கைகள்,போக்குவரத்து சேவைகள், கொடுக்கல் வாங்கல்கள் என அத்தனைக்கும் தனித்தனியான மொபைல் செயலிகள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே நமது வேலைகளை சுலபமாகவும் நேர்த்தியாகவும் குறித்த நேரத்திற்குள்  செய்து முடிக்கவும் முடியும்.


அநதவகையில் நீங்கள் இலங்கையில் வசிப்பவராயின், உங்களது வீட்டின் அல்லது நிறுவனத்தின் மின்சார கட்டணப்பட்டியல் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கென  ஒரு செயலி உள்ளது..



அதன் பெயர்  சி.இ.பி கேர் (CEB Care) எனப்படும் இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.


டவுன்லோட் செய்த பின்னர் உங்களது மின்சார பட்டியலில் உள்ள கணக்கு இலக்கத்தை உள்ளிட்டு ஒரு இலவச கணக்கை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் குறிப்பிட்ட செயலியின் மூலம் உங்களால் பின்வரும் வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.


சி.இ.பி கேர் (CEB Care) மூலம் பெற்றுக்கொள்ள முடியுமான வசதிகளாவன:


மின்சார தடங்கல்களை முறையீடு செய்ய முடியும்.


கடைசி மாதத்திற்கான மின்சார கட்டணப்பட்டியல் மீதியை அறிந்துகொள்ள முடியும்.

நீங்கள் செலுத்திய கட்டணங்கள் தொடர்பான விபரங்களை அறியலாம்.


மின்சார கட்டணத்தை கணிப்பதற்கான கணிப்பான் (Calculator) இதில் வழங்கப்பட்டுள்ளது.


மின்சார தடைகளை முன்கூட்டியே அறியலாம்

நீங்கள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் உபகரணங்களுக்கு ஏற்ப ஒரு நாளைக்கு அல்லது ஒரு தவணைக்கு எத்தனை அலகு மின்சாரம் பயன்படுத்தப்படும் என்பதை கணிக்கலாம்.


இது இவ்வாறாக இருக்க இந்த செயலியை இந்த செயலி இலங்கையில் குறிப்பிட்ட சில  பிரதேசங்களுக்கு மட்டுமே தற்போது ஆதரவளிக்கின்றது. எதிர்காலத்தில் முழு இலங்கைக்குமாக இது ஆதரவளிக்கலாம்.

ஆதரவளிக்கக்கூடிய பிரதேசங்கள்:



கண்டி,

கந்தகஸ்தொட்ட,
பேராதனை,
கலகெதர,
நாவலப்பிட்டிய,
கினிகத்தேனே,
மாவனெல்ல,
தம்புள்ளை,
மாத்தளை,
கேகாலை,
குண்டசலே,
நுவரெலியா,
இரத்தினபுரி,
ருவன்வெல்ல,
கஹவத்த,
எம்பிலிப்பிட்டிய,
எஹலியகொட,
ஸ்ரீ ஜயவர்தனபுர,
ஹொரண,
ஹோமகம,
பண்டாரகம,
அவிசாவல்லா


நீங்களும் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் ஒரு பிரதேசத்தில் வசிப்பவராயின்  இந்த செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள்.. மேலும் இதன் செரற்பாடு தொடர்பிலான உங்கள் கருத்துக்களை Comments பகுதியில் பதிவிடுங்கள்.

No comments:

Post a Comment