Wednesday, December 12, 2018

தமிழில் டைப் செய்ய அன்ரோயிட் உடன் பேசுங்கள்.


ஆண்ட்ராய்ட் போனில் பந்தி கணக்கில் தமிழை தட்டச்சு செய்வது என்பது ஆங்கிலத்தில் தட்டச்சு இடுவதை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே உள்ளது. இதன் போது அதில் ஏற்படும் எழுத்துப் பிழைகள் மற்றும் நேர வீண் விரையங்கள் என்பன மிகவும் சிக்கலானவை

இத்தகைய பிரச்சனைக்கு தீர்வாகவே Google இன் Gboard app உள்ளது.

இதைப் பயன்படுத்தி நாம் தமிழில் தட்டச்சு செய்து கொள்ளவும் முடியும் அதேவேளை தமிழ் குரல் உள்ளீடு: (Tamil Voice Typing) முறை மூலமும் மிக நீண்ட கட்டுரைகளை அல்லது கதைகளை மிகக்குறுகிய நேரத்தில் எழுத்துப் பிழையின்றி இலக்கணப் பிழையின்றி மிக விரைவாக பூர்த்தி செய்ய முடியும். நீங்கள்  IT Park வலைப்பதிவில் படிக்கும் பெரும்பாலான கட்டுரைகள் அவ்வாறான வழிமுறையை பின்பற்றி பிரசுரிக்கப்பட்ட வகைகள் ஆகும்.

இவ்வாறு தொடர்ச்சியாக குரல் வழி உள்ளிடுளை வழங்க இடையறா இணைய இணைப்பு மிகவும் அவசியமாகும். (இது ஆங்கில மொழிக்கு அவசியமன்று)


மேலும் இதில் நாம் உள்ளீடாக வழங்கும் ஒவ்வொரு சொல்லையும் மிகத் துல்லியமாக உணர்ந்து அவற்றை தமிழ் எழுத்துக்களாக எழுத்துப் பிழையின்றி  மாற்றுகிறது அத்துடன் இலக்கணப்பிழைகளின் அளவும் மிகக் குறைவு.

குரல் மூலம் தமிழ் மொழியை டைப் செய்வது எப்படி?

முதலில் ஜிபோர்ட் (Gboard) செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.





பின்னர் அதன் செட்டிங்க்ஸ் பகுதியின் ஊடாக (Add Keyboard) தமிழ் மொழி கீபோர்டை தெரிவு செய்யுங்கள்.

(Language and input > Gboard > Languages > Add Keyboard)


பிறகு நீங்கள் தமிழ் மொழியை டைப் செய்ய வேண்டிய இடத்திற்கு செல்க. ஜிபோர்ட் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் மைக்ரோபோன் ஐகானை அழுத்தி டைப் செய்ய வேண்டிய தமிழ் சொற்களை உச்சரியுங்கள்.

மேற்கூறியவாறு அமைப்பில் உங்கள் ஜி போர்டு இல்லையாயின் அதனை அப்டேட் செய்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய முனையும் வேளைகளில் இணைய இணைப்பு ஒன் செய்யப்பட்டு இருத்தல் வேண்டும் என்பதையும் முக்கியமாக கவனத்தில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment