Monday, January 7, 2019

வாட்ஸ்அப்பில் ’ஸ்கிரீன் வீடியோ ’வசதி : இனி சேரிங்..

Photo by freestocks.org from Pexels

இன்றைய நாட்களில் ஸ்மார்ட் போன் பிரியர்களின் முதல் விருப்பமாக இருப்பது வாஸ்ட்அப் செயலிதான். காரணம் நட்பு, புகைப்படம், பரிமாறுதல், குரூப்கள், சேட்டிங் என பொழுதுபோகத் தேவையான எல்லா அம்சங்களும் இதில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு குறைதான் இதில் இருந்தது. அது வீடியோ பார்க்கும் வசதி இல்லாதது. ஆனால் அந்தக் குறையை தற்போது இந்நிறுவனம் களைந்துள்ளது.
ஆம்! ஒருவர் அனுப்பிய வீடியோ லிங்குகளை கிளிக் செய்தால் அது யூடியூப் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளத்திற்குச் சென்று அந்த வீடியோ திரையில் தோன்றும். இதனால் வாட்ஸ்அப்பில் இருந்து வேறொரு மூன்றாம் தர தளத்திற்குச் செல்லவேண்டிய நிலை இருந்தது.
 
இப்போது  வாட்ஸ்அப்பில் அறிமுகமான புதிய பதிப்பில் இந்த வீடியோ வசதியைக் காணலாம் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தியுள்ள வீடியோ வசதியில் ,புதிய வாட்ஸ் அப் பதிப்பில் வரும் குறிப்பிட்ட லிங்குகளை கிளிக் செய்ததும் வாட்ஸ் அப்பிலேயே ஒரு திரை தோன்றும் அதில் வீடியோக்களைக் காணலாம் என இந்நிறுவனம்  கூறியுள்ளது.
 
வாட்ஸ்அப்பில் 0.3.1846 என்ற புதிய பதிப்பு உபயோகப்படுத்துபவர்களுக்கே இந்த வசதி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவை ஷேர் செய்யும், சவுண்ட் அட்ஜட்ஸ் செய்யவும், பிளே செய்யவும், இடையில் நிறுத்தவும் போன்ற பல அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இவ்வசதி பயனுடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment