Thursday, May 6, 2021

WhatsAppன் மூலம் பணம் செலுத்த முடியும்

Photo by PhotoMIX Company from Pexels

பல ஆண்டுகளாக, வாட்ஸ்அப் தனது சொந்த பணப்பரிமாற்றும் சேவையைத் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்துள்ளது அந்த வகையில், கடந்த ஆண்டு நம் அண்டை நாடான இந்தியாவிலும் இச் சேவையை அமுல்படுத்தி இருந்தது. ஆனால் அதற்கு முன்னர், இச் சேவையை நடைமுறைப்படுத்த பிரேசிலிய வங்கிகளுடன் ஒர் ஒப்பந்தத்தையும் மேற்கொண்டிருந்தது, இதில் ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக பிரேசிலில் இச் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இதனால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய நாடுகளிலும் இச் சேவையை உத்தியோக பூர்வமாக நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டி வந்தது WhatsApp நிறுவனம்.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இணையவெளிப் பயன்பாடுகள் அதிகரித்துச் சென்றுகொண்டு உள்ளதால் WhatsApp நிறுவனத்தின் WhatsApp Business செயலியின் பயன்பாடும், Google pay, மற்றும் Facebook pay போன்ற இணைய வெளிப் பணப்பரிமாற்றும் வீதமும், அவற்றின் தேவைப்பாடும், அனைத்துலக நாடுகளிலும் அதிகரித்துள்ளது.

புள்ளி விபரக் கணக்கெடுப்பின்படி அமெரிக்காவிற்கு மாறாக, பிற நாடுகளில் உள்ள பலர் குறுஞ்செய்தி அனுப்புவதையும் விட வாட்ஸ்அப்பை அதிகம் நம்பியிருக்கிறார்கள் - மேலும் வாட்ஸ் அப் பிசினஸ் (WhatsApp Business) என்பது சிறிய கடை உரிமையாளர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது, அவர்கள் தங்கள் தயாரிப்புகளை வழங்க பட்டியல்கள் (Categories) போன்ற அம்சங்களைப் பயன்படுத்துகிறார்கள், தகுதி (Status) எனும் பகுதில் பொருட்களை விளம்பரப்படுத்தவும் செய்கிறார்கள். எனவே, இவ் வசதிகளுடன் பொருட்கள், சேவைகளும் பணம் செலுத்திக் கொள்வனவு செய்யக்கூடிய வசதி வாய்ப்பையும் வழங்குவது மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும் - என வட்சப் நிறுவனம் கருதுகிறது. 


வட்சப் மூலம் பணப் பரிமாற்றமானது.... 

1.தயாரிப்புகளுக்கு பணம் செலுத்திக் கொள்வனவு செய்ய முடியும்.  

2. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இடையேயான பணப் பரிமாற்றங்கள் இலவசமாக இருக்கும்.

​​3. வணிக நிறுவனங்கள் பணத்தைப் பெறுவதற்கு ஒரு சிறிய கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

4. கொடுப்பனவுகளை முடிந்தவரை பாதுகாப்பாக செய்ய முடியும்.


வாட்ஸ்அப்பிற்கு அங்கீகாரம் பெற...

1. சிறப்பு பேஸ்புக் பே பின் அல்லது கைரேகை தேவைப்படுகிறது. 

2. ஆரம்பத்தில், சில வங்கிகளால் வழங்கப்பட்ட ஒரு சில டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மட்டுமே இணக்கமாக உள்ளன. ஆனால் வாட்ஸ்அப் இந்த சேவையை எதிர்காலத்தில் அதிக கூட்டாளர்களுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளது.


இத்தகைய கட்டண சேவையைத் திட்டத்தை வாட்ஸ் அப் நிறுவனம் ஜூன் 2020க்கு முன்பு தொடங்கப்போவதாகக் கூறியிருந்தது, ஆனால் பிரேசிலில் இச் செவை இடைநிறுத்தம் செய்யப்பட்டு ஒழுங்குமுறை ஆய்வு நிலுவையின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இறுதியில் பிரேசிலிய அதிகாரிகள் பார்த்த எந்தவொரு பிரச்சினையையும் பேஸ்புக்கோ, வாட்ஸ் அப்போ உருவாக்கியதாகத் தெரியவில்லை. எனவே தடைகள் அனைத்தும் நீக்கப்பட்ட நிலையில் இப்போது உண்மையான சேவையைத் தொடங்க தயாராக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.

இன்று வெற்றிகரமாக பிரேசிலிய மக்கள் வாட்ஸ் அப் மூலம் பணப்பரிமாற்றம் செய்யவும், சிரியா வியாபாரங்களை வாட்ஸ் அப் மூலம் கொண்டு நடத்தவும் தயாராகியுள்ளனர்.

இத்தகு நாடுகளில் தடையின்றி பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் இவ் வசதி நடைமுறைக் வந்தால் அடுத்த கட்டமாக நம் நாட்டிலும் இவ் வசதி வாய்ப்பு மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரலாம். 

No comments:

Post a Comment