Tuesday, May 19, 2020

Google Meet | கூகுள் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் Google Meet இலவசம்!


Google Meet என்பது கூகுளின் வீடியோ கான்பரன்சிங் சேவையாகும். இது நாள்தோறும் அதிக எண்ணிக்கையிலான பயனர்களை இணைக்கிறது. இதற்கு மிகப்பெரிய காரணம் தற்போது பரவி வரும் கொரோனோ வைரஸ்தொற்று தான். தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக கடந்த சில நாட்களாக, மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து அலுவலக வேலைகள், ஆன்லைன் வகுப்புகள் போன்றவற்றைச் செய்து வருகின்றனர். இதற்காக Google Meet மற்றும் இது போன்ற பிற வீடியோ கான்பரன்சிங் சேவைகளின் ஆதரவு பயன்படுத்தப்படுகிறது.

இப்போது Google கணக்கு உள்ள அனைத்து பயனர்களுக்கும் Google Meet இலவசமாக கிடைக்கும் என்று ஆல்பாபெட்டின் கூகுள் அறிவித்துள்ளது. Google Meet-ல் ஒவ்வொரு நாளும் சுமார் 3 மில்லியன் புதிய பயனர்கள் சேர்க்கப்படுவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுளின் வலைப்பதிவில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு, ஏப்ரல் 29 முதல் Google Meet அனைவருக்கும் இலவசமாக கிடைக்கிறது. இருப்பினும் இந்த இலவச கிடைக்கும் காலம் வரும் சில வாரங்களில் ஒரு கட்டமாக விரிவாக்கப்படும்.

மே மாதம் முதல் எந்த பயனரும் Google Meet-க்கு பதிவுபெற முடியும் என்றும் இதற்காக அவர்களுக்கு கூகுள் கணக்கு மட்டுமே தேவைப்படும் என்றும் கூகுள் கூறுகிறது. தொழில் மற்றும் கல்வி குழுக்களின் பயனர்களுக்கு முன்னர் கிடைத்த அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். எளிமையான திட்டமிடல் மற்றும் திரை பகிர்வு, நிகழ்நேர தலைப்பு போன்றவை இதில் அடங்கும்.

இந்த சேவையை அனைவரும் இலவசமாகப் பெற மாட்டார்கள். ஆரம்பத்தில், சில பயனர்கள் இதை இலவசமாகப் பயன்படுத்த முடியும். மேலும், காலப்போக்கில் இது எல்லா நாடுகளிலும் வெளிவரும். கூகுள் இதற்காக 'Notify me' பக்கத்தையும் உருவாக்கியுள்ளது. அங்கு பயனர்கள் தங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். மேலும், Google Meet-க்கு இலவச அணுகலைப் பெறும்போது அவர்களுக்கு அறிவிக்கப்படும். 

மேலும், Web-பிலும், iOS பயனர்களுக்கும், Android பயனர்களுக்கும் மொபைல் செயலி மூலம் இலவச அணுகல் கிடைக்கும் என்று கூகுள் கூறுகிறது.

No comments:

Post a Comment