Tuesday, May 19, 2020

இனி ஐபோன் பயனர்களும் 8 நபர்களுடன் உரையாடலாம்! வாட்ஸ்அப் குரூப் காலிங் அம்சம்


குரூப் கால் வரம்பை அதிகரிக்க ஐபோன் பயனர்களுக்கு WhatsApp புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் ஐபோன் பயனர்களை எட்டு பங்கேற்பாளர்கள் வரை குழு அழைப்பை அனுமதிக்கிறது. இது முன்னர் நான்கு பயனர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதே போன்ற அப்டேட் சில நாட்களுக்கு முன்பு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வெளியிடப்பட்டது. ஆண்ட்ராய்டிலும், முன்பு நான்கு பயனர்கள் வரை ஒரே நேரத்தில் குரூப் காலை மேற்கொள்ள முடியும், இது இப்போது எட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இயங்குதளங்களுக்கான இந்த அம்சத்தில், உடனடி செய்தியிடல் செயலி சிறிது நேரம் செயல்பட்டு வந்தது. ஆண்ட்ராய்டுக்குப் பிறகு, ஐபோன் பயனர்கள் இந்த அப்டேட்டுக்காக காத்திருந்தனர். இப்போது இறுதியாக நிறுவனம் வாட்ஸ்அப் ஐபோனுக்கான சமீபத்திய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் ஐபோன் பயனர்கள் இப்போது ஒரே நேரத்தில் 8 பேருக்கு கால் செய்யலாம். 


ஐபோனுக்கான வாட்ஸ்அப் v2.20.50 புதிய குரூப் கால் அம்சத்தைக் கொண்டுவருகிறது. மேலும் சேஞ்ச்லாக் படி, இந்த அப்டேட்டுக்கு பிறகு, ஐபோன் பயனர்கள் அதிகபட்சம் எட்டு பயனர்களுக்கு ஒரே நேரத்தில் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை செய்யலாம்.

அடிப்படையில், இந்த அம்சத்தைப் பயன்படுத்த, அனைத்து பயனர்களும் வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும் அல்லது அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் ஐபோனில் தானாக அப்டேட் இயக்கவில்லை எனில், நீங்கள் App Store மூலம், வாட்ஸ்அப்பை சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும். அப்டேட்டின் சேஞ்ச்லாக் படி, குரூப் காலிங்கில் பயனர்களை மேம்படுத்துவதோடு, செய்தி செயல் மெனுவும் புதுப்பிக்கப்பட்டு, iOS 13 பயனர்களுக்கு காட்சி மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

No comments:

Post a Comment