Wednesday, September 25, 2019

Google Play WARNING: இந்த 2 ஆப்ஸ்களையும் உடனே UNINSTALL செய்யவும்! ஏனென்றால்?



கொடுமை என்னவென்றால், இந்த இரண்டு ஆப்ஸ்களும் சுமார் 1.5 மில்லியனுக்கும் மேற்ப்பட்ட டவுன்லோட்களை சந்தித்து உள்ளது!
பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, Adware-க்கு சேவை செய்யும் இரண்டு தீங்கிழைக்கும் பயன்பாடுகள் (Malicious apps) இப்போது Google Play ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இந்த ஆப்ஸ்கள் அவற்றின் ஆயுட்காலத்தில் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களை சந்தித்து உள்ளன. 
கூறப்படும் இந்த இரண்டு ஆப்ஸ்ளையும் Sun Pro Beauty Camera மற்றும் Funny Sweet Beauty Selfie Camera என்று அழைக்கப்படுகிறது. 



இந்த இரண்டு ஆப்ஸ்களும், பயனரின் உறுதிப்படுத்தல் இல்லாமலேயே ஆடியோவைப் பதிவுசெய்யும் திறன் உட்பட ஸ்மார்ட்போன் மீதான முழு அனுமதிகளையும் கேட்கின்றன என்றும், உடன் டெவலப்பர்களுக்கு நெறிமுறையற்ற முறையில் பணம் சம்பாதிக்க உதவும் ஆட்வேரை வழங்குவதாகவும் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. 


உடனே அன்இன்ஸ்டால் செய்யவும்!

முன்னரே குறிப்பிட்டுள்ளபடி, இந்த இரண்டு ஆப்ஸ்களும் இப்போது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன, ஆக ஒருவேளை நீங்கள் இதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால், உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறீர்கள். 

சன் புரோ பியூட்டி கேமரா ஆப்!

இந்த இரண்டு தீங்கிழைக்கும் பயன்பாடுகளை முதலில் கண்டுபிடித்தவர் Wandera-வை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆவர். சன் புரோ பியூட்டி கேமரா பயன்பாடு ஆனது கடந்த 2017 முதல் கூகுள் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் அதன் ஆயுட்காலத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை குவித்துள்ளது. 

ஃபன்னி ஸ்வீட் பியூட்டி செல்பி கேமரா ஆப்!

மறுகையில் உள்ள, ஃபன்னி ஸ்வீட் பியூட்டி செல்பி கேமரா ஆப் ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் கூகுள் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் இது 500,000 க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களை நிகழ்த்தியுள்ளது. இதை உடனடியாக நீக்கச்சொல்லி முதலில் புகாரளித்தவர் ZDNet தளம் ஆகும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்பிகிறோம். 

இரண்டுமே செல்பீ பில்டர் ஆப்ஸ் ஆகும்!

இந்த இரண்டு ஆப்ஸ்களுமே ஒரே மாதிரியான செயல்பாட்டை கொண்ட செல்பீ பில்டர் கேமரா ஆப்ஸ்கள் ஆகும். மேலும் இவை இரண்டுமே ஊடுருவும் விளம்பரங்களை வழங்கியதாக வாண்டெரா ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 

ஆட்வேர் கொடுக்கும் குடைச்சல்கள்!

ஆட்வேர் எப்போதுமே ஒரு பயனருக்கு பெரிய தொல்லை தான், இது பேட்டரியை கரைக்கும், டேட்டாவை செலவழிக்கும், பிரவுசிங் / மெசேஜிங் அல்லது பிற வேலைகளுக்கு நடுவில் குறுக்கிட்டு பயனரின் உற்பத்தித்திறனைக் கொல்லும்.

"
கேள்விக்குரிய" அனுமதிகள்!

விளம்பர நடத்தையை பொறுத்தவரை, குறிப்பிட்ட ஆப் ஆனது ஒருபோதும் திறக்கப்படாவிட்டாலும் கூட, நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்த பின்னரும் கூட சன் ப்ரோ பியூட்டி கேமரா ஆப் ஆனது விளம்பரங்களை காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த இரண்டு ஆப்ஸ்களுமே பயனரின் னுமதியின்றி ரெக்கார்ட் ஆடியோ போன்ற "கேள்விக்குரிய" அனுமதிகளைக் கேட்கின்றன 

இனிமேல் கவலை வேண்டாம்!

எப்படியிருந்தாலும், இந்த இரண்டு பயன்பாடுகளும் முன்பே குறிப்பிட்டபடி Google Play Store இலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இந்த இரண்டு பயன்பாடுகளை நீங்கள் நிறுவியிருந்தால், Factory reset செய்ய வேண்டியிருந்தாலும் கூட, அவற்றை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுமாறு பரிந்துரைக்கிறோம். 


மதிப்புரைகளை படித்து பாருங்கள்!

ஒருபோதும் கண்மூடித்தனமாக ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம். எந்தவொரு ஆப்பை டவுன்லோட் செய்வதற்கு முன்பும் ஆப் சார்ந்த மதிப்புரைகளை படித்து பாருங்கள். ஒருவேளை அது எதிர்மறையான மதிப்புரைகளை கொண்டு இருந்தால் அல்லது ஒரே ஒரு ஸ்டார் கொண்டு நிரப்பப்பட்டு இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. 



கண்மூடித்தனமாக அனுமதிகளை வழங்க வேண்டாம்!

அதேபோல், சமரசம் செய்யக்கூடியவற்றை முழுமையாக மதிப்பாய்வு செய்யாமல், எந்தவொரு பயன்பாட்டிற்கும் கண்மூடித்தனமாக ஸ்மார்ட்போன்களின் மீதான அனுமதிகளை வழங்க வேண்டாம். 


No comments:

Post a Comment