ஆப்பிள் தனது வருடாந்திர
ஐபோன் நிகழ்வை செப்டம்பர் 10 ஆம் தேதி அன்று
கலிபோர்னியாவில் நடத்துகிறது, இந்நிகழ்வில் ஆப்பிள்
நிறுவனம் அதன் புதிய ஐபோன் 11 மாடல்களை வெளியிடும் என்று
நம்பப்படுகிறது.
புதிய ஐபோன்களுடன், ஒவ்வொரு ஆண்டையும் போலவே, ஆப்பிள் அதன் அடுத்த தலைமுறை ஐஓஎஸ் ஆன iOS 13 ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் மொபைல் இயக்க முறைமையின் சமீபத்திய பதிப்பான
ஐஓஎஸ்13 ஆனது 2019
ஆம் ஆண்டிற்கான ஆப்பிள் உலகளாவிய
டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2019) அறிவிக்கப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய ஐஓஎஸ்13-ல் என்னென்ன அம்சங்கள் மற்றும் திறன்களை நாம்
எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி இதுவரையிலாக வெளியான அனைத்து தகவல்களையம் தொகுத்து
இங்கே வழங்கியுள்ளோம்.
iOS 13 ஆனது நிறுவனத்தின் மிகவும் வேகமான OS ஆக இருக்கும் என்று ஆப்பிள் கூறுகிறது. இது ஆப்ஸ் மற்றும் அவற்றிற்கான அப்டேட்களை வழங்கும் முறையை மாற்றியுள்ளதாகவும், இப்போது பதிவிறக்கங்கள் 50 சதவீதம் சிறியதாக இருக்கும் என்றும், அப்டேட்டின் அளவுகள் 60 சதவீதமாக சுறுக்கப்படும் என்றும் ஆப்பிள் கூறியுள்ளது. தவிர, ஃபேஸ் ஐடி ஆனது 30 சதவீதம் வேகமாக இருக்கும் என்று ஆப்பிள் குறிப்பிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றுப்படி, அதன் போர்ட்ரெயிட் லைட்டிங் மோட் ஆனது "உங்கள் ஸ்டுடியோ ஒளிநிலைமைகள் மற்றும் தீவிரத்தை காட்சியை அடிப்படையாக கொண்டு சரி செய்யும்". ஐஓஎஸ் 13-ல் இடம்பெறும் இந்த அம்சமானது, போர்ட்ரெயிட் லைட்டிங் மோடின் ஒளிநிலைமைகளின் தீவிரத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ அனுமதிக்கும்.
மேலும் ஆப்பிள், High-Key Mono எனும் மேம்பாட்டை இணைப்பதின் வழியாக அதன் Monochrome portrait mode-ஐயும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த பில்டர் ஆனது பேஷன் புகைப்படங்களை எடுக்கும் போது பயன்படுத்தப்படும் Stylistic monochromatic aesthetic-ஐ பிரதிபலிக்கும்.
ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு அதன் macOS-ல் டார்க் மோட்-ஐ உருட்டிய பின்னர், இப்போது ஐஓஎஸ் 13 வழியாக அதை புதிய 2019 ஆம் ஆண்டு ஐபோன்களுக்கு கொண்டு வருகிறது.
ஸ்டாக் ஆப்பிள் வால்பேப்பர்களில் இப்போது டார்க் மோட் ஆல்டர்னேட்டிவ்கள், புகைப்படங்கள், ரீமைண்டர்கள் போன்றவைகள் ஆனது டார்க் தீம் மற்றும் இருண்ட நிறத்திலான யூஸர் இன்டர்ஃபேஸ் கூறுகளை கொண்டுள்ளது.
மெமோஜிகளை மேலும் தனிப்பட்டதாக்க (Personalised ஆக மாற்ற), ஆப்பிள் அதன் iOS 13-க்கு கூடுதல் தனிப் பயனாக்குதலுக்கான விருப்பங்களை சேர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது உங்கள் மெமோஜியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சில ஸ்டிக்கர்களும் உருவாக்கப்படும் என்று ஆப்பிள் கூறியுள்ளது. இது Keyboard app-ல் கிடைக்கும். அதன் கீழ் Headgear, glasses மற்றும் broken teeth உட்பட பல தனிப்பயனாக்க விருப்பங்களை நீங்கள் பெறலாம்.
No comments:
Post a Comment