Sunday, July 14, 2019

வாட்ஸ்ஆப் (Whats App) செயலியில் வரும் இந்த புதிய அம்சம்.!





வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் இந்நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் புதிய அம்சத்தை விரைவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

மீடியாக்களை எடிட் செய்யும் வசதி



இப்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில் வாட்ஸ்ஆப் சாட் விண்டோவில் இருந்தபடி வாட்ஸ்ஆப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மீடியாக்களை எடிட் செய்ய தனியே வேறொரு செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

நேரத்தைமிச்சப்படுத்தும்

Photo by Andrey Grushnikov from Pexels
மேலும் இந்த அம்சம் கண்டிப்பாக பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும், பின்பு மீடியா எடிட் செய்ய அவர்கள் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளையும் பயனற்றதாக மாற்றும். புதிய அப்டேட் எடிட் மீடியா ஷார்ட்கட் என அழைக்கப்படுகிறது.


ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்

Photo by Alex Fu from Pexels

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்த புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது, என்றும் விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் செயலியினுள் புகைப்படம் திறக்கப்பட்டதும் எடிட் பட்டன் காணப்படுகிறது. இதனை க்ளிக் செய்தால் டெக்ஸ்ட், டூடுள் அல்லது தலைப்பை சேர்க்கும் வசதி காணப்படுகிறது.



ஸ்டேட்டஸ் அம்சம்

Photo by Marek Levak from Pexels

மேலும் வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் அம்சம் வழங்கி சிலகாலம் ஆகிவிட்டது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் மற்றும் இதர செயலிகளுடன் பகிர்ந்து கொள்வது எளிமையாக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் இந்த அம்சம் சீராக இயங்க கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எதையேனும் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.


ஃபேஸ்புக் செயலிகளுடன் பகிர்ந்து கொள்ள

Photo by Kaboompics .com from Pexels

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்டை ஃபேஸ்புக் மற்றும் இதர செயலிகளுடன் பகிர்ந்து கொள்வது எப்படி? 1 - ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும். 2 - ஸ்டேட்டஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். 3 - ஸ்டேட்டஸ் அப்டேட்டை உருவாக்க வேண்டும். 4 - ஸ்டேட்டஸ் புதியதா அல்லது பழையதா என்பதை பொருத்து அவற்றை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படும்.

மற்ற செயலிகளுடன் ஸ்டேட்டஸ்

Photo by Tracy Le Blanc from Pexels

அப்டேட் மற்ற செயலிகளுடன் ஸ்டேட்டஸ் அப்டேட்டை பகிர்ந்து கொள்வது எப்படி? வாட்ஸ்அப் செயலியை திறக்கவும். ஸ்டேட்டஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும். ஸ்டேட்டஸ் அப்டேட்டை உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment