Photo by rawpixel.com from Pexels |
இன்றைய நவீன உலகில் வலம்வரும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்க வேண்டிய அத்தியாவசிய அம்சங்களுள் தலையாயதாக மின்னஞ்சல் (E-mail) விளங்குகிறது. இந்த உலகில் நாம் வசிக்கும் இடத்தை அடையாளப்படுத்தவும் மற்றும் பல சேவைகளைப் பெற்றுக்கொள்ளவும் எமக்கு பௌதீக முகவரி (Address) உள்ளதைப் போன்றே, இணைய வெளியில் சேவைகளையும் எம் தேவைகளையும் பூர்த்திசெய்து கொள்வதற்கு மின்னஞ்சல் (E-mail) எனும் இணைய முகவரி எமக்கு மிக அத்தியாவசியமானதாகிவிட்டது.
இவ்வாறான சூழ்நிலையில் நாம் இணையவெளியில் செய்யும் அணைத்து வேலைகளும் நடவெடிக்கைகளும் மற்றும் அனைத்துவிதச் செயற்பாடுகளும் எம் மின்னஞ்சளில் (E-mail) உள்ள விசேட கணக்கில் தனித்துவமாகச் செமித்து வைக்கப்படுகின்றது. உதாரணமாக நாம் இருக்கும் இடம், நாம் இணையத்தை பயன்படுத்தி தேடிய விடயங்கள் மற்றும் இணைய வெளியில் உள்ள ஏனைய கணக்குகளுக்கு நாம் கொடுத்துள்ள கடவுச்சொற்கள், பிறருக்கு நாம் அனுப்பியுள்ள மின்னஞ்சல்கள் மற்றும் நம் புகைப்படங்கள் உட்பட நாம் பயன்படுத்தும் அன்ரொய்ட் அல்லது அப்பில் சாதனங்களை கட்டுப்படுத்தவும் அல்லது அதன் கணக்கை முடக்குதல் எனப் பலதரப்பட்ட விடயத்தையும் பார்வையிடவும் அவற்றை மாற்றியமைக்கவும் முடியும்.
இப்பெயர்ப்பட்ட சூழ்நிலையில் இம் மின்னஞ்சல் (E-mail) சேவையினை பற்பல முன்னனி நிறுவனங்கள் இலவசமான வழங்கி வருகின்றன. அவற்றுள் Google, Yahoo, Microsoft, Apple போன்ற பல முன்னனி நிருவனங்களைக் குறிப்பிடலாம். அதுமட்டுமல்லாது சமூக வலைத்தளங்களும் இவ் பாதுகாப்புச் சேவையினை தற்போது வழங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது (Facebook, Whats App, Instagram, etc…)
இவ்வாறு பல முதன்மை முன்னனி நிறுவனங்கள் இச் சேவையை தனிநபர் தொடக்கம் விசேட நிறுவனங்களுக்குமேன வழங்கி வந்தாலும் அவ் மின்னஞ்சல் (E-mail) சேவைக்கு வழிமையான கடவுச்சொல் (Strong Password) என்பது மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது. இந்த விடயம் இவ்வாறு முன்னேறி வரும் சந்தர்ப்பத்தில் இணைய வெளித் திருட்டு எனும் விடயமும் வெகு சிறப்பாக முன்னேற்றமடைந்து வந்திருக்கிறது. அதை ஓரளவிற்கு தடுக்கும் முகமாகவே மேற்படி முன்னனி நிருவனங்கள் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறையினை செயற்பாட்டில் அமுள்படுத்தியுள்ளன. இவ் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறையை அமுள்படுத்துவதற்கு சாதாரண அல்லது ஆன்ராட்டு கையடக்கத் தொலைபேசி (Hand phone) ஒன்று நிச்சயமானதாகும்.
இரட்டை அடுக்குப் பாதுகாப்பினை (Two-Step verification) செயற்படுத்திய பின், உங்கள் மின்னஞ்சல்; கணக்கிற்குறிய (E-mail Account) உண்மையான கடவுச் சொல்லினை (Password) நீங்கள் தட்டச்சிட்ட (Typing) பின்னர் உங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு ஓர் OTP (One Time Password) ஒரு நேரக் கடவுச் சொல் தற்காலிகமாக உங்கள் கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கு குருஞ் செய்தியாக (SMS) அல்லது அழைப்பினை (Call) ஏற்படுத்தி உங்களுக்கு வழங்கப்படும். அதனை உரிய இடத்தில் தட்டச்சிட்டால் (Type) மாத்திரமே உங்கள் கணக்கிற்குள் (Account) உள் நுழையலாம் (Login)
Photo by rawpixel.com from Pexels |
இரட்டை அடுக்குப் பாதுகாப்பினை (Two-Step verification) செயற்படுத்தும் வழிமுறை
வழிமுறை – 1
- Gmail app இன் ஊடாக உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் (E-mail Account) உள்நுழைந்து (Login) கொள்ளுங்கள்.
வழிமுறை – 2
- இடப்பக்க மேல் மூலையில் உள்ள Gear icon இணை click செய்யுங்கள்.
- அதன் கீழ் சென்று settings என்பதனை click செய்யுங்கள்.
- பின்னர் தோன்றும் சாளரத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியினைத் தெரிவு செய்யுங்கள் பின்னர் Manage your Google Account என்பதனை click செய்யுங்கள்.
- பின்னர் மேல் உள்ள Tabஇல் ளுநஉரசவைல என்பதனை Click செய்யுங்கள்.
- அதன் கீழ் உள்ள 2-Step Verification என்கதனை click செய்யுங்கள்
வழிமுறை – 3
- GET STARTED என்பதனை click செய்யுங்கள் அத்துடன் உங்கள் மின்னங்கல் முகவரிக்குரிய கடவுச்சொல்லினையும் (Password) தட்டச்சிட்டு உள்நுலையுங்கள்.
- TRY IT Now என்பதனை Click செய்யுங்கள் அதன் பின் புதிய சாலரத்தில் தோன்றும் Configuration சாலரத்தில் Yes என்பதனை தேர்வு செய்யுங்கள்.
- உங்கள் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தினை தட்டச்சிடுங்கள்.
- How do you want to get codes? எனும் பிரிவினில் Text message அல்லது Phone call எனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்த பின் SEND என்பதை click செய்யுங்கள் (Text message எனும் தெரிவே மிகச்சிறந்தது)
- சற்று நேரத்திற்குள் Google தரப்பில் இருந்து ஓர் Verification code message உங்கள் கையடக்கத் தொலை பேசிக்கு அனுப்பப்படும் அதில் 6 digit number code காணப்படும்.
- அதனை உங்கள் Google 2-Step verification இல் தட்டச்சிட்டு 2-Step Verification இனை Turn on செய்துவிடுங்கள்.
அவ்வளவுதான் இனி உங்கள் கணக்கை திருடுவது சாத்தியம்றது. இருப்பினும் உங்கள் கடவுச்சொல் மீதும் கவனமாயிருங்கள்.
No comments:
Post a Comment