Wednesday, August 1, 2018

CAPTCHA (Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart) கப்சா பற்றிச் சுவாரஸ்யமான அறிமுகம்.



இதை நாம் இனைய பயன்பாட்டில் form நிரப்பும் போது online votingல் பங்குபற்றும் போது அல்லது online ticket booking / shopping செய்யும் போது, Google or Yahoo! or outlook போன்றவற்றில் E-mail உருவாக்கும் போது CAPTCHA இனை நாம் கண்டிருப்போம்..

இதில் எழுத்து/ எண்/ சிறு கணித வினாக்களைக் கொண்டமைந்த தெளிவற்ற புகைப்படம் காணப்படும் இதில் உள்ள விடயத்தை அதன் கீழ் உள்ள பெட்டியில் சரியாக தட்டச்சிட்டால் மாத்திரமே நமது செயற்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த கட்டத்துக்கு செல்லும்.இதுவே CAPTCHA எனப்படும்.

C - Completely
A - Automated
P - Public
T - Turing test to tell
C - Computers and
H - Humans
A - Apart

1950 களில் பிரிட்டிஷ் விஞ்ஞானியான ஆலன் டீயுரிங் என்பவரால் டீயூரிங் டெஸ்ட் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.


இதன் மூலம் கணினி சிந்திக்கும் திறன் மனிதனின் சிந்திக்கும் திறனிற்குச் சமனானதா / இல்லையா என அறிய பயன்படுத்தப்பட்ட ஓர் தெழிநுட்ப உக்தியாகும். அவ்வாறு அவர் அன்று பயன்படுத்தியதன் மேம்பட்ட வடிவமே இன்றைய ஹப்சா CAPTCHA ஆகும்.

இது முதலில் Yahoo! நிறுவனத்தின் மின்னஞ்சல் (E-mail) சேவையில் ஹக்கஸால்  (Hackers) அனுப்பப்படும் தன்னியக்க எரிதங்களை (Automated Spam mail) தடுப்பதற்காக பயன்படுத்தினார்கள்.


தற்போது கூட இதன் மேம்படுத்தப்பட்ட வசந்தி நடைமுறையில் உள்ளது. இதனைத் தோடர்ந்து பல முன்னணி நிறுவனங்கள் தங்களது சேவைகளை spammers / hackers இடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு இச் சேவையை பயன்படுத்த ஆரம்பித்தனர்.


CAPTCHA மூலம் முன்வைக்கப்படும் புகைப்படங்கள் தெளிவற்ற வகையில் காணப்படுவதால் அதில் உள்ளவற்றை hackers உருவாக்கும் தன்னியக்க செய்நிரல்களால் வாசித்து அதற்கேற்ப பதிலளிக்க முடியாது போய்விடுகிறது ஆனால் மனிதனால் மட்டுமே அதில் உள்ள விடயத்தை ஊகித்து சரியான முறையில் பதிலளிக்க இயலும் எனும் நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு பயனரின் செயட்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாகவே CAPTCHA program வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது பயனரை எரிச்சலுக்கு உட்படுத்தும் விடயமாகவும் உள்ளது. ஏனெனில் CAPTCHA இல் உள்ள தெளிவற்ற புகைப்படத்தில் உள்ள விடயங்களை நாம் ஊகித்து தட்டச்சிடும் போது அதுவும் தவறாக மாற வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழும் பட்சத்தில் நாம் மீண்டும் மீண்டும் அதாவது சரியாக வரும் வரையில் தட்டச்சிட்டே ஆகவேண்டும் என்ற நிலை உள்ளது. அது மட்டுமின்றி நாம் பிழையான உள்ளீட்டை வழங்கும் நேரங்களில் CAPTCHA இல் உள்ள தெளிவற்ற புகைப்படங்களும் மாறிக் கொண்டே இருக்கும்..

மேற்படி இடர்பாட்டை நீக்கவே தற்போது Google நிறுவனம்  I'm not a Robot எனும் reCAPTCHA முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இம் முறையில் சுட்டி (mouse)  கையாலும் விதம் அதாவது அதன் அசைவு முறையினை வைத்து அது பயனரா (user) அல்லது தன்னியக்க நிகழ்ச்சியா (Spam program) என்பதை தீர்மானிக்கும்.

No comments:

Post a Comment