Monday, May 17, 2021

BSEகான பாடத் தெரிவும், online registrationஉம், வட்டியில்லா கடன்


நாடளாவிய ரீதியில் 2021/2022 கல்வி ஆண்டை அடிப்படையாகக் கொண்டு புதிய மாணவர்களை BSE (Bachelor of Software Engineering) கற்கை நெறிக்காக (4 ஆண்டுகால கற்கைநெறி) இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் (OUSL - Open University of Sri Lanka) இணையவழி ஊடாக BSE பட்டப்படிப்பை பதிவுசெய்யும் நிகழ்வு பரவலாக இடம் பெற்றுக் கொண்டுள்ளது. 


இருந்த போதிலும் (online) இணையவழி மூலம் மாணவர்கள் தாமாகவே பதிவு செய்வதால் அதில் பாடங்களைத் தேர்வு செய்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இத்தகைய இடர் பாட்டினை இவ் வலைப்பதிவு தீர்க்கும் என நம்புகின்றோம். 



படிமுறை - 1 

1. Link : https://ums.omis.site/application-details இணை click செய்து OUSL பாடத்தை பதிவுசெய்யும் வலைப்பக்கத்தில் நுழையுங்கள்.


2. Login இணை அழுத்துங்கள், இங்கு Username இற்கு உங்களது NIC (National Identify Card) இலக்கத்தையும், Password இக்கு OUSL இனால் முன்னர் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் கடவுச்சொல்லை வழங்கி உள்நுழைந்து கொள்ளுங்கள். 


படிமுறை - 2


1. Select a program என்பதில் BS. BACHELOR OF SOFTWARE ENGINEERING என்பதை தெரிவு செய்யவும்


2. Preferred course selection எனும் பகுதியின் கீழ் All courses மற்றும் Selected courses எனும் இரு தேர்வுகள் இருப்பதைக் காணலாம். இதில் Selected courses என்பதை click செய்யுங்கள் (இதில் All courses என்பதை தெரிவு செய்தீர்கள் என்றால் நீங்கள் (1st year) ஒரு வருடத்திற்கு உரிய பாடங்களுக்கான மொத்தத் தொகை பணத்தை தவணை அடிப்படையில் கட்டவண்டி நேரிடும். உண்மையில் அவை ஓர் பெரிய பண தொகையாக அமைந்துவிடும்) 


3. 1ம் வருடத்திற்குரிய, 1st Semester கான இந்த 6 பாடங்களையும் (MHZ3459 - Basic Mathematics for Computing, 

EEX3467 - Software Concept and Programming, 

EEI3262 - Introduction to Object Oriented Programming, 

EEI3346 - Web Application Development, EEI3266 - Information System and Data Management, 

EEI3269 - Introduction to Mobile Application Development) , அத்துடன் கட்டாய பாடங்களான EGAP (LEE3410 - English for General Academic Purposes), EfIL (FDE3020 - Empowering for Independent Learning) எனும் பாடங்களையும் தெரிவுசெய்து தவணை அடிப்படையில் பணத்தை செலுத்தலாம். 


அல்லது 


இலக்கம் 3ல் தேர்வு செய்த பாடங்களுக்கும், அவற்றுக்குரிய குறித்த பணத் தொகையை Online Registration செய்வதற்காக செலுத்த முடியாததாக இருப்பின் அல்லது நீங்கள் மாணவர்க்கான வட்டியில்லா கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் யோசனை இருப்பேன் ( மாணவருக்கான வட்டியில்லா கடன் திட்டம் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள https://studentloans.mohe.gov.lk/loan_application/ ) பின்வரும் முறையில் online registration மேற்கொள்ளலாம்.


4. முதலாம் வருடத்திற்குரிய (1st year), 1ம் Semesterல் உள்ள அந்த 6 பாடங்களில் இருந்து பின்வரும் மூன்று பாடங்களை தேர்வு செய்யுங்கள் ( EEI3266 - Information System and Data Management, 

EEI3346 - Web Application Development,

EEX3467 - Software Concept and Programming) 

அத்துடன் கட்டாய படங்களான EGAP (LEE3410 - English for General Academic Purposes), EfIL (FDE3020 - Empowering for Independent Learning) எனும் பாடங்களையும் தெரிவுசெய்து குறைந்த அளவிலான படத்தை தவணை அடிப்படையில் பணத்தை செலுத்தலாம். 


குறிப்பு: 1.6.2021கு முன்னர் online registration முடித்துக் கொள்ளுங்கள்


படிமுறை 2இல், எண் 4ஐ பின்பற்றிப் பதிவு செய்த மாணவர்கள்; தாங்கள் மூன்று பாடத்துடன் முக்கியப் பாடமான இரண்டு பாடங்களையும் சேர்ந்து மொத்தமாக ஐந்து பாடங்களை பதிவு செய்ததால் ஐந்து பாடங்கள் மாத்திரமே உங்களுக்கான 1ம் வருடத்தில், 1 Semesterல் கற்பிக்கப்படும் என தவறாக எண்ண வேண்டாம். ஏனெனில் BSE பாடம் சார்ந்த அனைத்து கற்கை நெறிகளும் 9ம் மாதம் 4ம் திகதி அளவில் ஆரம்பமாகும். 

அதற்கிடையில் நீங்கள் சமர்ப்பித்திருந்த வட்டியில்லா கடன் திட்டம் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டாள் அல்லது கட்சியினரை கூறிய பணத்தை நீங்கள் சேர்த்து விட்டால். 9ம் மாத அளவில் OUSL இனால் வழங்கப்படும் ADD/DROP முறைமூலம் ஏனைய மூன்று பாடங்களையும் தேர்வு செய்து கட்சியை ஆரம்பிக்க முடியும். 


அதற்கிடையில் Online Registration இணை 1.6.2021இற்கு முன் பூர்த்தி செய்த அனைவருக்கும் 6ம் மாத (May) அளவில் EGAP, EfIL ஆகிய பாடங்கள் Online மூலம் கற்பிக்கப்படும். பின்னர் 1ம் வருடத்திற்குரிய, 1st semester 4ம் திகதி 9ம் மாத அளவில் ஆரம்பமாகும். 

No comments:

Post a Comment